Home /local-news /

வேளாண் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மானிய கடன் திட்டம் - தகுதிகள் என்ன?

வேளாண் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மானிய கடன் திட்டம் - தகுதிகள் என்ன?

தேனி மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றிட மானிய கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

    மானிய கடன் :-

    2021 22-ம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையினால் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும், 40 பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 8 பஞ்சாயத்து கிராமத்தை சேர்ந்த வேளாண்மை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய முடியும்

    இத்திட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுடைய அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாத கணினி இயக்குதலில் முன்னறிவுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அக்ரி கிளினிக் அமைக்க தேவையான நிலம் மற்றும் மரச்சாமான்கள் தவிர்த்து 2 இலட்சம் மொத்த மதிப்புள்ள இத்திட்டத்திற்கு ஒரு இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் அக்ரி கிளினிக் அமைத்தல், வேளாண் சார்ந்த தொழில்களான காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், பசுமைக் குடில் அமைத்தல், வேளாண் உபகரணங்கள் வாடகை மையம் அமைத்தல், விதை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை மையங்கள் அமைத்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.

    நிபந்தனை :-

    மேலும் இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் இளைஞர்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, விண்ணப்பதாரரின் வங்கி கணக்குப் புத்தக நகல், வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்க இருப்பின் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்பளிப்பு ஆவணம் ஆகியவற்றுடன் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், பெருந்திட்ட வளாகம், தேனி என்ற முகவரியில் 25.01.2022-அன்று மாலை 05.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டும்.

    பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சம்பந்தபட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு முழு தகவலைப் பெற்று பயன் அடைந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி