Home /local-news /

போடிநாயக்கனூர் நகராட்சியில் ஒரே நாளில் அதிகமான நபர்கள் வேட்புமனு தாக்கல் 

போடிநாயக்கனூர் நகராட்சியில் ஒரே நாளில் அதிகமான நபர்கள் வேட்புமனு தாக்கல் 

தேனி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று (பிப்.,3) மாவட்டம் முழுவதிலும் இருந்து 1305 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. 

தேனி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று (பிப்.,3) மாவட்டம் முழுவதிலும் இருந்து 1305 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. 

தேனி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று (பிப்.,3) மாவட்டம் முழுவதிலும் இருந்து 1305 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. 

    போடிநாயக்கனூர் நகராட்சியில் மட்டும் நேற்று ( பிப்., 3 ) அதிகமான நபர்கள் வேட்புமனு தாக்கல்


    தேனி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று ( பிப்., 3 ) மாவட்டம் முழுவதிலும் இருந்து 1305 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

    வேட்புமனு தாக்கல் :-

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 4-ஆம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் உள்ள, ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. பிப் 2 வரை 6 நகராட்சியில் உள்ள 177 இடங்களுக்கு 80 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், நேற்று ( பிப்ரவரி 3 ) மட்டும் 391 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தேனி - அல்லிநகரம் நகராட்சியில் 74, பெரியகுளம் நகராட்சியில் 56, போடிநாயக்கனூர் நகராட்சியில் 87, கூடலூர் நகராட்சியில் 34, கம்பம் நகராட்சியில் 82, சின்னமனூர் நகராட்சியில் 58 என ஆறு நகராட்சிகளில் இதுவரை மொத்தமாக 391 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதேபோன்று, மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளிலும் நேற்று வரை 221 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், நேற்று 613 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் .

    ஆறு நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டுகளில் நேற்று வரை 1305 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மாவட்டத்திலேயே நேற்று அதிகமான நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்த இடமாக ( 87 வேட்பு மனுக்கள் ) போடிநாயக்கனூர் நகராட்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் கம்பம் நகராட்சியில் திமுக 17, அதிமுக 33, பாஜக 5, காங்கிரஸ் 2, சிபிஐ(எம் ) 2, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1, நாம் தமிழர் கட்சி 2, அமமுக 5, எஸ்டிபிஐ 10, தேமுதிக 1, புதிய ஜனநாயக கட்சி 1, சுயேச்சை வேட்பாளர் 3 என மொத்தம் 82 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி