Home /local-news /

மேகமலை : பகலில் வெயில்; இரவில் கடும் குளிர் - அவதிப்படும் மக்கள்

மேகமலை : பகலில் வெயில்; இரவில் கடும் குளிர் - அவதிப்படும் மக்கள்

Megamalai 

Megamalai 

தேனி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான மேகமலையில் பகல் நேரத்தில் வெயில்; இரவு நேரத்தில் கடும் உறைபனி போன்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

    தேனி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான மேகமலையில் பகல் நேரத்தில் வெயில்; இரவு நேரத்தில் கடும் உறைபனி போன்ற சீதோஷ்ண நிலையால் மேகமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேகமலை :-

    உயர்ந்து நிற்கும் மலைச்சிகரங்களுக்கு நடுவில் உள்ள பெரும் பள்ளத்தாக்குப் பகுதியே மேகமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்தப் பள்ளத்தாக்குப் பகுதி. அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க மேகமலையைத் தேர்ந்தெடுத்தனர். மேகமலை பகுதிகளில் முழுக்க முழுக்க காப்பி தேயிலை போன்றவைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேக மலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளதால், கண்களை கவரும் தேயிலைத் தோட்டங்களும், இங்கு எப்போதும் குளுமையான சூழலும் இருக்கும். இதனாலேயே தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் தேர்ந்தெடுப்பது மேகமலை தான். சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மேகமலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை வனத்துறையினர்.

    இந்த தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்கள் சென்று வேலை செய்து வருகின்றனர். பலர் மேகமலை பகுதியிலேயே தங்கி தோட்ட வேலையை செய்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் மேகமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் மேகமலைக்கு அனுமதிப்பது இல்லை. மேலும் ஏலத் தோட்டத்திற்கு பணியாட்கள் வேலைக்கு செல்ல தினசரி அனுமதிப்பதில்லை. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள வேலையாட்கள், மேகமலை ஊர் மக்களோடு சேர்ந்து தோட்டத்திலேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    கடும் குளிர் :-

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சின்னமனுார் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாறு, மணலாறு, அப்பர் மணலாறு மற்றும் இரவங்கலாறு மலைக்கிராமங்களில் சில மாதங்களாகவே உறைபனி மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. மேகமலையில் கடும் குளிரும், மழையும் பெய்து வருவதாலும், அட்டை பூச்சிகளுக்கு மத்தியிலும், எந்த நேரமும் யானைகள் ஊருக்குள் வந்து விடும் என்ற அச்சத்திலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

    மேலும், மேக மலைப்பகுதியில் அவ்வப்போது வெயிலும் குளிர்ச்சியான காற்றும் நிலவி வருவதால், வானிலை மாற்றத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர் மேகமலை மக்கள். இரவு வேளைகளில் கடுமையான உறைபனி நிலவுவதால் வீடுகளிலேயே முடங்கிக் உள்ளனர் அப்பகுதி மக்கள்.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி