தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்
ரத்த தான முகாம் :-
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடமான சிக்னல் அருகே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஒருங்கிணைந்து இரத்த தான முகாமை நடத்தினர். இந்த முகாமில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.
முகாமிற்கு வருபவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின், இரத்த தானம் அளிக்க வந்தவர்களுக்கு காய்ச்சல் சோதனை செய்யப் பட்டது. பின்னர், இரத்த தானம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று பரவியதால் மக்கள் சிரமபட்டு வந்தனர். இதனால் இரத்ததானம் செய்ய வருவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் மற்ற நோய்களுக்கு தேவை படும் இரத்ததின் இருப்பு குறைத்து உள்ளது .
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறிவுறுத்தலின் பெயரில் தேனி மாவட்டம் முழுவதும் ஏதேனும் ஒரு தனியார் அமைப்புடன் இனைந்து இரத்ததான முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கம்பத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் என்ற அமைப்பை ஒருங்கிணைத்து கம்பம் நகரில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மொத்தம் 50 யூனிட்டுக்கு மேல் ரத்தம் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு மருத்துவர் பிரியா கூறுகையில், “கொரோனா அச்சத்தின் காரணமாக பெரும்பாலும் மக்கள் இரத்த தானம் செய்ய முன் வருவதில்லை.
தற்போது தேனி அரசு மருத்துவமனையில் இரத்தத்தின் இருப்பு குறைந்து வருவதால், தேனி மாவட்டத்தில் இரத்த தானம் முகாம் நடத்த முடிவு எடுக்கப் பட்டது. எனவே கம்பத்தில் உள்ள தனியார் அமைப்பு மூலம் நடத்த முடிவு செய்து, முகாம் நடத்தப்பட்டது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு குளிர்பாணம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. மேலும் இரத்தம் அளித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.