Home /local-news /

கேரள வனத்துறையை கண்டித்து தமிழக பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் - ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர்

கேரள வனத்துறையை கண்டித்து தமிழக பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் - ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர்

 மங்கல தேவி கண்ணகி கோயில்

மங்கல தேவி கண்ணகி கோயில்

MangalaDevi Kannagi Temple | தமிழக பத்திரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிய கேரள வனத்துறையை கண்டித்து தமிழக பாஜகவினர் குமுளி சோதனை சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழக பத்திரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிய கேரள வனத்துறையை கண்டித்து தமிழக பாஜகவினர் குமுளி சோதனை சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் :-

    வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழா கடந்த சனிக்கிழமையன்று  நடைபெற்றது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே நடக்கும் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகவும் புகழ் பெற்றதால் கோவில் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

    இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி கோவில் பகுதிக்குச் சென்று செய்தி சேகரிக்க சென்ற தமிழக பத்திரிகையாளர்களிடம் கேரள வனத்துறை அதிகாரி அகில் பாபு, கேமரா மற்றும் சேனல் லோகோ ஆகியவற்றை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என்று அனுமதிக்க மறுத்ததுடன் ஒருமையில் பேசி பத்திரிக்கையாளர்களை அவமரியாதை செய்துள்ளார்.

    இதனை கண்டித்து அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடக தமிழக பத்திரிகையாளர்கள் குமுளி சோதனைச் சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதும் பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்து சாலை மறியல் செய்த பின்னரே கோவில் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரள வனத்துறை அதிகாரிகள் தமிழக பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களை கோவில் பகுதிக்கு அனுமதிக்க கடும் நெருக்கடி காட்டி வரும் நிலையில், பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் செய்து கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கேரள அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்தும் தமிழக பிஜேபியினர் அக்கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கேரளா அரசுக்கு எதிராகவும், கண்ணகி கோயிலில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் கூறுகையில், \" தமிழக பத்திரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தி அவமரியாதை செய்த கேரள அரசின் வனத்துறையை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் கண்ணகி கோயில் வழிபாட்டு உரிமையிலும் கேரள அரசு தொடர்ந்து அத்துமீறி வருகிறது என்றார்.

    அதனைத் தொடர்ந்து தெலுங்கு செட்டியார் பேரவை மாநிலத் தலைவரான ஜெகநாத் மிஸ்ரா பத்திரிகையாளருக்கு ஆதரவு தெரிவித்து, கேரளா வனத்துறையை கண்டித்து கண்டனம் தெரிவித்தார்.

    பத்திரிகையாளர்களை அவமரியாதை செய்த கேரள வனத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கண்ணகி கோவிலுக்கு சென்று பளியன் குடியில் இருந்து தமிழக அரசு தார்சாலை அமைத்து தர வேண்டும் என ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார்.

    பத்திரிக்கை நிருபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் கட்சியைத் தவிர்த்து பொதுமக்களும் கண்ணகி கோவில் பகுதிக்கு வந்த பக்தர்களும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி