Home /local-news /

உசிலம்பட்டி: குலதெய்வ கோவிலுக்கு படையெடுக்கும் தேனி மக்கள்..

உசிலம்பட்டி: குலதெய்வ கோவிலுக்கு படையெடுக்கும் தேனி மக்கள்..

Temple festival 

Temple festival 

Usilampatti: மாசி மாதம் மகாசிவராத்திரி நாளில் பெரும்பாலும் சிறிய கோவில்களும் கூட திறக்கப்பட்டு சிறிய கோவிலிலும் பூஜைகள் நடத்தப்படுவது இந்த நாளுக்கான சிறப்பாகும்.

    மாசி மாதம் மகா சிவராத்திரியன்று குலதெய்வ கோவிலுக்கு தென் மாவட்ட மக்கள் அதிகம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற செல்கின்றனர்

    மகா சிவராத்திரி :-

    சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக இந்து மக்களால் பார்க்கப்படுகிறது மாசி மாதம் மகா சிவராத்திரி. இந்த நாளில் மகா சிவராத்திரி அன்று இந்து மக்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவன் கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விரதம் இருந்து சிவனை வழிபடுவர்.

    இந்த மகா சிவராத்திரி நாளை எதிர்பார்த்து பலரும் காத்திருந்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற விரதம் இருந்து மகாசிவராத்திரி இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வழிபட்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்திப்பர்.

    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு மட்டும் உகந்த நாள் அல்ல. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று அங்கு குலதெய்வத்தை வணங்கி வழிபாடு செய்வர்.

    பொதுவாக குலதெய்வ கோவிலுக்கு பெரும்பாலானவர்களால் அடிக்கடி செல்வது இயலாத ஒன்று. ஆனால் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியன்று மாசிப்பச்சை நாளில் அனைவரும் தங்களின் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    தென்மாவட்ட மக்களின் நம்பிக்கை :-

    குறிப்பாக தென் மாவட்ட மக்கள் அதிக இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால் இந்த மாசி மகாசிவராத்திரி நாளில் தங்களது குல தெய்வ கோவிலுக்கு செல்வதை வருடா வருடம் வழக்கமாக வைத்துள்ளனர். தென் மாவட்ட மக்கள் மாசி மதம் மாசிப்பச்சை நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.

    தேனி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் இதர தென் மாவட்ட மக்களின் குல தெய்வங்கள் பெரும்பாலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளது . இதனால் தென் மாவட்ட மக்கள் இன்றைய மகாசிவராத்திரி நாளில் உசிலம்பட்டி நோக்கிய படையெடுப்பர்.

    இந்த மாசி மாதம் மகாசிவராத்திரி நாளில் பெரும்பாலும் சிறிய கோவில்களும் கூட திறக்கப்பட்டு சிறிய கோவிலிலும் பூஜைகள் நடத்தப்படுவது இந்த நாளுக்கான சிறப்பாகும். இதனால் அனைத்து கோவில்களும் திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் குலதெய்வ கோவிலுக்கு அதிகமானோர் செல்கின்றனர்.

    குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தாங்கள் கடந்த காலங்களில் வேண்டிக் கொண்ட வேண்டுதல்கள் ஆன பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது, மொட்டை அடித்து முடி காணிக்கை செய்வது போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.

    ஆன்மீகத்தில் சிறப்பு வாய்ந்த இந்த நாளில் தேனி மாவட்ட மக்கள் உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு அதிகாலை முதலே செல்ல தொடங்கியுள்ளனர். இன்று பெரும்பாலானோர் கோவிலுக்கு செல்வதால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்களின் விலை கணிசமாக தேனி மாவட்டத்தில் உயர்ந்துள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி