Home /local-news /

லோயர்கேம்ப் : சத்தமில்லாமல் நடந்த மதுரை கூட்டு குடிநீர் திட்டப் பணி - ஜே.சி.பியை சிறைப்பிடித்த விவசாயிகள்  

லோயர்கேம்ப் : சத்தமில்லாமல் நடந்த மதுரை கூட்டு குடிநீர் திட்டப் பணி - ஜே.சி.பியை சிறைப்பிடித்த விவசாயிகள்  

Farmers

Farmers protest 

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மதுரை கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதை கண்டித்தும் பொதுப்பணி துறை அதிகாரிகளை கண்டித்தும், ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    லோயர்கேம்ப் : சத்தமில்லாமல் நடந்த மதுரை கூட்டு குடிநீர் திட்டப் பணி - ஜே.சி.பியை சிறைப்பிடித்த விவசாயிகள்

    தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மதுரை கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதை கண்டித்தும் பொதுப்பணி துறை அதிகாரிகளை கண்டித்தும், ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை கூட்டு குடிநீர் திட்டம் :-

    முல்லைப் பெரியாற்று தண்ணீரானது தேனி, மதுரை உட்பட ஐந்து மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தேனி மாவட்டம் வழியாக பாயும் முல்லைப் பெரியாற்று தண்ணீர் வைகை அணையில் தேக்கப்பட்டு வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக ஆற்றுப்பாதையில் அனுப்பப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியாற்று தண்ணீரை ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லும் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் சுமார் 1,300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

    விவசாயிகள் எதிர்ப்பு :-


    இந்த திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர் . இதற்கு மாற்று இத்திட்டமாக வைகை அணையை தூர்வாரி வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் எந்த மாற்று கருத்து இல்லை என்பதும், முல்லைப் பெரியாற்று தண்ணீரை ஆற்று வழியாக மதுரை மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர் .

    ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தது. சில இடங்களில் மறைமுகமாகவும் நடந்ததாக கூறப்படுகிறது .

    சிறைபிடிப்பு :-

    இந்த நிலையில், லோயர்கேம்ப் அருகே ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்காக பொதுப்பணித்துறையினர் தொட்டி அமைப்பதற்கு மண் பரிசோதனை செய்ய ஜே.சி.பி.இயந்திரம் மூலம் பணி மேற்கொண்டனர். மதுரை கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுவதை அறிந்த விவசாயிகள் மற்றும் முல்லை சாரல் விவசாய சங்கத்தினர், உடனடியாக பணியை கைவிடக்கோரி ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

    இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், " மதுரை மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல எங்களுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. முல்லைப் பெரியாறு, வைகை ஆறு மற்றும் நீரோடைகள் மூலம் வைகை அணைக்கு தண்ணீர் வருகிறது. எனவே வைகை அணையை முழுமையாக தூர்வாரி அங்கு போதுமான அளவு தண்ணீரை தேக்கி, அங்கிருந்து மதுரை மக்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு தண்ணீரை ஆறுவழியாக எடுத்து கொள்ளட்டும். ஆனால் லோயர்கேம்ப்பில் இருந்து நேரடியாக ராட்சத குழாய் மூலம் தினமும் 100 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் தேனி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படும்' என்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Farmers, Theni, Water

    அடுத்த செய்தி