Home /local-news /

லோயர் கேம்ப் : ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் - மக்கள் கடும் அவதி.!

லோயர் கேம்ப் : ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் - மக்கள் கடும் அவதி.!

Lower

Lower camp

Theni | லோயர் கேம்ப் அருகே உள்ள பெரியார் மின் நிலையத்தின் பழைய பாலம் இடிந்ததைத் தொடர்ந்து கோம்பை பண்ணைப்புரம் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது உடைந்த குழாய் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    லோயர் கேம்ப் அருகே உள்ள பெரியார் மின் நிலையத்தின் பழைய பாலம் இடிந்ததைத் தொடர்ந்து கோம்பை பண்ணைப்புரம் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது உடைந்த குழாய் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    உடைந்த குழாய் :-

    தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கூடலூர் கேகே பட்டி கேஜி பெட்டி கோம்பை பண்ணைப்புரம் போன்ற பல பகுதி மக்களுக்கு லோயர் கேம்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    லோயர் கேம்பில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது . இங்கு முல்லைப்பெரியாறு தண்ணீரை லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பம்ப் செய்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    லோயர் கேம்ப் அருகே உள்ள பெரியார் மின்நிலைய பழைய பாலத்தின் வழியாக குடிநீர் செல்லும் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் மின்நிலைய கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலை புதிய பாலம் அமைக்கப்பட்ட பின் பழைய பாலம் பயனற்று இருந்ததால் அதற்கு மேலாக குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    தற்போது முல்லை பெரியாற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் பொதுப்பணித் துறை சார்பாக பெரியாறு மின் நிலையம் பாலத்தின் அடியில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது. பழைய பாலம் மற்றும் மண்ணரிப்பு மரத்தின் வேர் பாலத்தின் இடையே சென்றதால் பாலம் பலமிழந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி சரியத் தொடங்கியது.

    பிற்பகல் வேளையில் பொதுப்பணித்துறை மற்றும் இதர பணியாளர்கள் வேலை முடித்து சென்ற பிறகு இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    பாலம் உடைந்ததில், லோயர் கேம்பில் இருந்து பம்ப் செய்து கோம்பை பண்ணைப்புரம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் குழாய் உடைந்தது. மேலும் தொலைத்தொடர்பு கேபிள்களும் அருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் மற்றும் கம்பம் நகராட்சி அலுவலர்கள் குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்ட வந்த தண்ணீரை நிறுத்தி மேலும் பாலம் முடியாமல் தடுத்தனர்.

    தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பில்லர் வைப்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை இந்த பணிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முழுமையான பணிகள் முடிய ஒரு வார காலத்திற்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது . இந்த பணிகள் முடிவடைந்த பின்பு உடைந்த குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Drinking water, Theni

    அடுத்த செய்தி