Home /local-news /

தேக்கடி : தொடங்கியது 14 வது மலர் கண்காட்சி - குழந்தைகளைக் கவரும் பல்வேறு விஷயங்கள் உள்ளடக்கம் முழு விவரம் இதோ!

தேக்கடி : தொடங்கியது 14 வது மலர் கண்காட்சி - குழந்தைகளைக் கவரும் பல்வேறு விஷயங்கள் உள்ளடக்கம் முழு விவரம் இதோ!

Flower show

Flower show

Thekkady : இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி மேள தளங்களுடன் தொடங்கியுள்ளது. தமிழக மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் வருகை

    இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி மேள தளங்களுடன் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது.  தமிழக மற்றும் கேரள சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    கோடை மலர் கண்காட்சி :-

    கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில் இந்தாண்டு நடைபெறுவதற்கான அனுமதியை கேரள அரசு வழங்கியது.

    இதனையடுத்து தேக்கடி 14 வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில், (ஏப்ரல் 1-ல் )  தொடங்கி மே மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் 32 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று மேள தாளங்களுடன் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது.

    தேக்கடி பகுதியில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை தமிழக மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.

    கலை நிகழ்ச்சிகள் :-

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மலர் கண்காட்சி என்பதால்
    பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக் கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    30,000 சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மலர்களை கொண்டு பார்வையாளர்களை கவரும் விதமாக மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இக்கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் விதமாக வண்ண விளக்குகள், குழந்தைகளைக் கவரும் யானை புலி வரிக்குதிரை போன்ற பல உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெரிய ராட்டினங்கள், வணிகக் கடைகள், வேளான் கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம் , கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், இன்னிசை கச்சேரி, நடன நாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், காமெடி அரங்குகள், மேடை நிகழ்ச்சி, சினிமா நாடகம் உட்பட மலர் கண்காட்சி நடைபெற உள்ள அனைத்து நாட்களிலும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    இந்த மலர் கண்காட்சியில் 7 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

    செய்தியாளர்: சுதர்ஸன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kerala, Park, Theni, Tour

    அடுத்த செய்தி