Home /local-news /

குமுளி : தை மாதத்திலும் உறைய வைக்கும் பனி - நடுக்கத்தில் உள்ளூர் மக்கள்

குமுளி : தை மாதத்திலும் உறைய வைக்கும் பனி - நடுக்கத்தில் உள்ளூர் மக்கள்

தேனி

தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தை மாதம் முதல் வாரத்திலேயே பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது

தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தை மாதம் முதல் வாரத்திலேயே பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது

    தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், மார்கழி மாதத்தில் தொடங்கி தை முதல் மாதத்திலேயே பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கொட்டும் பனி :-

    தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தை மாதம் முதல் வாரத்திலேயே பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. குமுளி, கம்பம், கூடலூர், உத்தமபாளையம், கம்பம் மெட்டு போன்ற பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் தேனி மாவட்டத்தில் அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    சமீப காலமாக பனிப்பொழிவு குறைந்த போதும் தற்போது மீண்டும் தை மாதம் முதல் வாரத்தில் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மார்கழி மாதம் போலவே தை முதல் வாரத்திலும் அதிகளவில் பனி காணப்படுவதால் அதிகாலையில் ஏலத் தோட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். பனிப் பொழிவு அதிகம் காணப்படுவதால் முதியவர்கள் மற்றும் மூச்சு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குமுளி, கம்பம் மெட்டு போன்ற மலைப் பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி