Home /local-news /

முல்லை பெரியாறு அணையை ரகசியமாக பார்வையிட்ட கேரள அதிகாரிகள்.. நடந்தது என்ன?

முல்லை பெரியாறு அணையை ரகசியமாக பார்வையிட்ட கேரள அதிகாரிகள்.. நடந்தது என்ன?

முல்லை

முல்லை பெரியாறு அணையை ரகசியமாக பார்வையிட்ட கேரள அதிகாரிகள்..

Mullaperiyar Dam : அனுமதியின்றி முல்லை பெரியாறு அணைக்கு கேரள ஓய்வு காவல்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் சென்று வந்த சம்பவத்திற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

    அனுமதியின்றி முல்லை பெரியாறு அணைக்கு கேரள ஓய்வு காவல்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் சென்று வந்த சம்பவத்திற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .

    முல்லைப் பெரியாறு அணை :-

    முல்லைப்பெரியாறு அணைக்கு அலுவல் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் சென்று வருவது வழக்கம்.

    அலுவல் பணிக்காக அணைக்கு செல்லும் அதிகாரிகள் தேக்கடியிலிருந்து படகு மூலமாகவோ அல்லது வள்ளக்கடவிலிருந்து வனப்பகுதி வழியாக வாகனத்திலோ செல்கின்றனர். அணைக்குச் செல்பவர்கள் வருகைப்பதிவேட்டில் பதிவேற்றம் செய்து விட்டு யார்யார் செல்கிறார்கள், எதற்காக செல்கிறார்கள் என்ற தகவல்களை உறுதிபடுத்த வேண்டும்.

    இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணைப்பகுதிக்குச் செல்லும்போது, கேரள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அப்துல்சலாம், மற்றும் ஒய்வு பெற்ற மற்றொரு போலிஸ் அதிகாரி, டெல்லி போலீஸ் அதிகாரி, அவரது மகன் உள்ளிட்ட நால்வரும் தேக்கடியிலிருந்து பெரியாறு அணைக்கு சென்றனர்.

    பெரியாறு அணையில் உள்ள கேரள போலீசாரின் வருகைப்பதிவேட்டில் இவர்கள் சென்றது குறித்து எந்த தகவலும் பதியப்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் முல்லைப்பெரியாறு அணை காவல்நிலைய டிஎஸ்பி நந்தன்பிள்ளை, அத்துமீறி அனுமதியின்றி அணைக்குச் சென்ற கேரள ஓய்வு காவல் அதிகாரிகள், டெல்லி காவல் அதிகாரி, அவரது மகன் என நான்கு பேர்கள் மீதும் வழக்குப்பதிய உத்தரவிட்டார்.

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப் பகுதிக்கு செல்ல பல்வேறு கட்ட கட்டுப்பாடுகளுக்கு பின்பு செல்ல அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த ஒரு முன் அனுமதியும் இல்லாமல் கேரள அதிகாரிகள் அணைப் பகுதிக்கு சென்று வந்த சம்பவம் அணை பாதுகாப்பு குறித்து கம்பம் பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ரகசியமாக அணையைப் பார்வையிட்ட சம்பவம் அணையை சேதப்படுத்த அதற்கான முயற்சியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாக ஐந்து மாவட்ட விவசாய சங்க பொதுச் செயலாளரான பொன் காட்சி கண்ணன் தெரிவித்துள்ளார்.

    மேலும் முல்லைப் பெரியாறு அணை தேனி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் எனவும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த முழு விவரங்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாய சங்ஙத்தினர் கோரிக்கையை வைத்து உள்ளனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Farmers, Kerala, Mullai Periyar Dam, Theni

    அடுத்த செய்தி