Home /local-news /

ஜான் பென்னிகுவிக்கின் 111வது நினைவு தினம் - அஞ்சலி செலுத்திய தேனி விவசாயிகள்

ஜான் பென்னிகுவிக்கின் 111வது நினைவு தினம் - அஞ்சலி செலுத்திய தேனி விவசாயிகள்

ஜான்

ஜான் பென்னிகுவிக்கின் 111வது நினைவு தினம் - அஞ்சலி செலுத்திய தேனி விவசாயிகள்

John Pennyquick | முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் 111வது நினைவு தினத்தையொட்டி, பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுமக்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பென்னிகுவிக் நினைவு தினம்:-

    தென் தமிழகத்தில் 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 111வது நினைவு தினம் இன்று (09/03/22).

    தேனி மாவட்டத்தை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். அவரது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் பொங்கல் வைத்து விழாவாக கொண்டாடுவதை தேனி மாவட்ட மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

    அதேபோல அவரது மறைவு தினமான மார்ச் 9ஆம் தேதி அவரை நினைவுகூறும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.

    பென்னி குவிக் நினைவு தினத்தையொட்டி தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள அவரது மணி மண்டபத்தில் ஜான் பென்னி குவிக்கின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர் முல்லை சாரல் விவசாய சங்கத்தினர்.

    இந்த நிகழ்வில் முல்லை சாரல் விவசாய சங்கத் தலைவர் கொடியரசன் மற்றும் விவசாயிகள், நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Mullai Periyar, Theni

    அடுத்த செய்தி