தேனி மாவட்டம், சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் மற்றும் ஆண்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு :-
பொது இடங்களில் உதவிட வன்முறைக்குள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூகநலத்துறையின் சார்பில் தேனியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கு 28.01.2022க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியகி உள்ளது.
இந்த மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 விசாரணை பணியாளர்கள், ஒரு பல்நோக்கு உதவியாளர் மற்றும் ஒரு பாதுகாவலர் என 6 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இப்பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் முழுவிபரங்களை www.theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து அதனை தகுதியுள்ள நபர்கள் தன்விவர குறிப்பு மற்றும் சான்று நகல்களுடன் வரும் 28.01.2022க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.67, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.