Home /local-news /

ஹிஜாப் விவகாரம்: கம்பத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரம்: கம்பத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Hijab

Hijab issue 

Cumbum : தேனி மாவட்டம் கம்பம் நகரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தேனி மாவட்டம் கம்பம் நகரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஹிஜாப் விவகாரம்:-

    கடந்த டிசம்பர் மாதம் முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக கர்நாடக உயர்நீதிமன்றம் மார்ச் 15ஆம் தேதி கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் விஷயத்தில் விதித்த தடை செல்லும் எனவும், இஸ்லாமிய அடிப்படையில் ஹிஜாப் கட்டாயம் இல்லை எனவும் தீர்ப்பு வழங்கியது.

    கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராடத்தை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம் நகரில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கம்பம் நகர் ஏகேஜி திடல் எதிர்புறத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் என பலர் கூடி ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோஷங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது முன்னாள் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது பாவா பதுருதீன் தலைமையில் நடைபெற்றது. உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: BJP, Hijab, Karnataka, Muslim, Theni

    அடுத்த செய்தி