மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு. அருவியில் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவிப்பு.
கும்பக்கரை அருவி :-
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியானது கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில்தான் கும்பக்கரை அருவி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மிகவும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் பரவலாக பெய்த கனமழையால் நேற்று காலை முதல் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தேவதானப்பட்டி வனச்சரகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அருவிக்கு வரும் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.