Home /local-news /

தேனி : முழு ஊரடங்கு - தன்னார்வலர்களின் நெகிழ்ச்சி செயல் 

தேனி : முழு ஊரடங்கு - தன்னார்வலர்களின் நெகிழ்ச்சி செயல் 

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது , தேனி மாவட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் உணவு அளித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது , தேனி மாவட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் உணவு அளித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது , தேனி மாவட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் உணவு அளித்து வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது , தேனி மாவட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் உணவு அளித்து வருகின்றனர்.

    ஊரடங்கு :-

    கடந்த ஆண்டு கொரோனாத் தொற்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி உலகத்தையே ஆட்டிப் படைத்தது. இந்த கொரோனாத் தொற்று தமிழகம் முழுவதும் பரவி, அதிக அளவிலான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்தது. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள், கடைகள், வணிக வளாகங்கள், போன்ற அனைத்தும் மூடப்பட்டது.

    ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் . குறிப்பாக நாள் கணக்கில் உணவில்லாமல் பட்டினியாக இருந்தனர் . பெருந்தொற்று காலத்திலும் மரத்துப் போகாத மனிதநேயம் காரணமாக சில தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது,தண்ணீர் வழங்குவது உடைகள் வழங்குவது போன்ற தங்களால் முடிந்த உதவிகளை ஆதரவற்றவர்களுக்கு செய்து வந்தனர்.

    தற்போது கொரோனாத் தொற்று குறைய தொடங்கிய உடன் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பியது. ஆனால் மீண்டும் ஒமைக்ரான் காரணமாக, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது அம்மா உணவகம் ஹோட்டல்கள் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைக்குமா என்பது ஐயமே . இதனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றித்திரியும் சில ஆதரவற்றவர்கள் உணவு கிடைக்காமல் இருப்பதை பார்க்க முடிகிறது.

    மீண்டும் சேவை :-

    இந்தநிலையில், சிலர் ஊரடங்கு இல்லாத காலத்திலும் தேனி மாவட்டத்தில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அதிக அளவிலான தன்னார்வலர்கள் பல பகுதிகளுக்கும் சென்று ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் தன்னார்வலர்கள் மீண்டும் உணவு தயாரித்து ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.

    நெகிழ்ச்சி செயல் :-

    அதனைத் தொடர்ந்து, கம்பம் பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு கம்பம் நகரைச் சேர்ந்த தன்னார்வலரான சாதிக் என்பவர் தக்காளி சாதம், லெமன் சாதம் போன்ற உணவுகளை தயார் செய்து ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறார் . ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதாக கூறுகிறார்.

    மேலும் ஊரடங்கு காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளை ஆதரவற்றோருக்கு செய்து வருவதாகவும், இன்னும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதை அதிகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கம்பத்தைச் சேர்ந்த சாதிக் .தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது பலரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona, Lockdown, Theni

    அடுத்த செய்தி