Home /local-news /

தேனி : கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதியுதவி பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

தேனி : கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதியுதவி பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

தேனி : கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதியுதவி பெறுவது எப்படி?

தேனி : கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதியுதவி பெறுவது எப்படி?

Theni | இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும்.

    கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்றிருந்தால் அரசு வழங்கும் நிதி உதவியின் மூலம் வீடு கட்டி கொள்வதற்கான வழிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது .

    நிதி உதவி :-

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்கள்சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால் வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூபாய் நான்கு லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது, இத்திட்டம் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது

    தகுதிகள் :-

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டு காலத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். அதனை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும்.

    பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது. அரசின் வேறு எந்த இலவச வீட்டு வசதி திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
    ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். வீடு கட்டுவதற்கு சொந்தமாக பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 28 ச.மீ வீட்டு மனை இருத்தல் வேண்டும்.

    பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் வீட்டு மனை பட்டா இருக்க வேண்டும் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வீட்டு மனை கூட்டுப் பட்டா இருத்தல் வேண்டும்.

    தேனி மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், திட்ட அலுவலர், செயற்பொறியாளர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் ஆகியோர் கொண்ட குழு தேனி மாவட்ட அளவில் பயனாளிகளை தேர்வு செய்து, தேனி தொழிலாளர் உதவி ஆணையர் மூலமாக ஒப்புதலுக்காக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் தேர்வு செய்து இறுதி ஒப்புதல் வழங்கும் பயனாளிகளே நிதியுதவி பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும், இதுகுறித்த விவரங்களை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது தேனி, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக தொலைபேசி (04546 - 260350) என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி