Home /local-news /

சின்னமனூர் இன்ஸ்பெக்டருக்கு கமல் வாழ்த்து.. கம்பத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம்.. தேனி மாவட்ட இன்றைய செய்திகள்..

சின்னமனூர் இன்ஸ்பெக்டருக்கு கமல் வாழ்த்து.. கம்பத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம்.. தேனி மாவட்ட இன்றைய செய்திகள்..

Theni news

Theni news

Theni District | இன்றைய தேனி மாவட்ட செய்திகள் ஒரு சில வரிகளில்...

  "4 லட்சம் ரூபாய் என் பணம் இல்லை " - நேர்மைக்கு கௌரவம் - கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து - இன்றைய தேனி மாவட்ட செய்திகள் (27/4/22)

  இன்றைய தேனி மாவட்ட செய்திகள் ஒரு சில வரிகளில்...

  நெல்லி சாகுபடி :-

  தேனி மாவட்டத்தில் வாழை, திராட்சை மா சாகுபடிக்கு அடுத்தபடியாக நெல்லி விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. நெல் விவசாயத்தில் லாபம் கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் நெல்லி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டிபட்டி பெரியகுளம் தேனி சுற்று வட்டார பகுதிகளில் நெல் விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது நெல்லி விவசாயத்தில் மருந்து தெளித்தல், களை எடுத்தல் பணிகள் அதிக பராமரிப்பு பணிகள் இருக்காது எனவும் , எப்போதும் சந்தையில் விலை போகக் கூடியது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகளிடமிருந்து நெல் லிக்காய் கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட வெளி சந்தையில் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது

  பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் :-

  தேனி மாவட்டம் கம்பம் கோயில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களிடம் கட்டாய வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இன்று கம்பம் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பெற்றோரிடம் கடுமையாக கல்வி கட்டணம் வசூல் செய்யும் சக்தி விநாயகர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பிச்சையெடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

  மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமெனவும் , அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக நாங்கள் பிச்சை எடுத்தாவது பள்ளி கல்வி கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளோம் என்றனர் போராட்டக்காரர்கள். இந்த போராட்டத்தில் மாநில அமைப்பாளர் அபுதாஹிர் தலைமையில், மாவட்டச் செயலாளர் உதுமான் அலி மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கம்பம் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

  டாஸ்மாக் விடுமுறை :-

  தமிழக அரசு 2022-ஆம் ஆண்டு 01.05.2022 அன்று மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்-2, எப். எல்-3, எப்.எல்-3(யு), எப். எல்-3(யுயு), எப்.எல்-4(யு), மற்றும் எப்.எல். 11 ஆகியவைகள் மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

  அதனடிப்படையில் 01. 05. 2022-ம் தேதி (ஞாயிற்று கிழமை) மே தினம் அன்று தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் எப். எல்-1, உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்-2, எப். எல்-3,எப்.எல்-3(யு), எப்.எல்-3(யுயு), எப். எல்-4(யு), மற்றும் எப்.எல். 11 ஆகியவைகளை 01.05.2022 அன்று மே தினத்தை முன்னிட்டு கட்டாயம் மூடப்பட வேண்டும் என்றும், விற்பனைகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும், மேற்காணும் நாளில் ஏதும் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

  வாகன விபத்து :-

  கம்பம் பகுதியில் இருந்து இளநீர் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொல்லம் செல்ல இருந்த வாகனம் கூடலூர் அருகே எதிர்பாராத விதமாக தலை குப்புறக் கவிழ்ந்து. இந்த விபத்தில் இளநீர்கள் அனைத்தும் சாலையில் உருண்டோடின. ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பினார் . இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சரக்கு வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து காரணமாக திண்டுக்கல் குமுளி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது

  தன்னார்வ அமைப்பு :-

  தேனி மாவட்டம் கூடலூரில் சோலைகள் கூடல் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த அமைப்பு சுமார் 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் கூடலூர் பகுதி முழுவதும் மரம் நடுவது, பனை விதை நடுவது, சீமை கருவேலமரங்களை ஒழிப்பது, இயற்கைசார் விழிப்புணர்வு, நெகிழி ஒழிப்பு போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

  கூடலூர் பகுதியில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அதனை பராமரித்து வருகின்றனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரங்களை வேரோடு ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். குறிப்பாக நீர்நிலைப் பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளையும் விதித்துள்ளனர்.

  சோலைக்குள் கூடல் என்ற தன்னார்வ அமைப்பில் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர்களே உறுப்பினராக உள்ளனர். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடலூர் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த பகுதியில் மரம் நடுவது நெகிழிப்பை அகற்றுவது நட்ட மரங்களை க்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது, சாய்ந்த செடிகளுக்கு பிடிமானம் ஏற்படுத்தி தருவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

  நேர்மை :-

  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள போடி ss.புரத்தை சேர்ந்த வெங்கடேசன் அப்பல்லோ மெடிக்கல் மேனேஜராக பணிபுரிகிறார். இவரது வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.400000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவர் தனது வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு இந்த பணம் எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுள்ளது என்னுடைய பணம் இல்லை இந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு எழுத்து பூர்வமாக வங்கி மேலாளரிடம் எழுதி கொடுத்துள்ளார். வங்கி மேலாளர் இவரது நேர்மையாக பாராட்டினார். மேலும் போடி காவல்துறை ஆய்வாளர் ராமலட்சுமி, வெங்கடேசனின் நேர்மையை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

  வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் :-

  தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளரான சேகருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன். சின்னமனூரில் காவல் ஆய்வாளராக இருப்பவர் சேகர் இவர் எங்கு சென்றாலும் அங்கு இயற்கை சார்ந்த மரம் நடுவது மற்றும் சமூகப் பணிகளில் செய்வதை ஆர்வம் காட்டுவார். தற்போது இவர் சின்னமனூர் காவல் நிலையத்தில் நூலகம் ஒன்றை அமைத்து மக்களுக்கு மன ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். மேலும் திருடுபோன நகையை நூதன முறையில் நகையை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார். இங்கு செய்தி பல இடங்களுக்கும் பரவ தொடங்கியது.

  "துளி வன்முறை இல்லாமல் சாணி உருண்டை டெக்னிக் மூலம் திருடு போன நகைகளை மீட்ட காவல் ஆய்வாளர் P. சேகர் முன்னெடுப்பில் சின்னமனூர் காவல்நிலையத்தில் ஒரு நூலகமும் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து மகிழ்ந்தேன். சேகருக்கும் அவருக்கு உறுதுணையாய் விளங்கும் சக காவலர்களுக்கும் என் பாராட்டுக்கள்" என மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  செய்தியாளர் : சுதர்ஸன், தேனி
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி