Home /local-news /

போடிநாயக்கனூர்: வெளுத்து வாங்கிய கனமழை - கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடிநாயக்கனூர்: வெளுத்து வாங்கிய கனமழை - கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேற்கு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான குரங்கனி, கொட்டகுடி, முதுவாக்குடி பகுதிகளில், பெய்த மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான குரங்கனி, கொட்டகுடி, முதுவாக்குடி பகுதிகளில், பெய்த மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான குரங்கனி, கொட்டகுடி, முதுவாக்குடி பகுதிகளில், பெய்த மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான குரங்கணி வனப் பகுதிகளில் நேற்று கொட்டித் தீர்த்த மழை காரணமாக, கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக போடி கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனைத் தொடர்ந்து, அணைக்கட்டு, நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியிலிருந்து ராஜ வாய்க்கால் மூலம் ஏழு குளங்களுக்கு அதிகளவிலான நீர் செல்வதால் போடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், இப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கக் கூடும் என்ற காரணத்தால், கொட்டக்குடி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்களுக்கு காவல் துறை சார்பிலும் பொதுப்பணித்துறையினர் சார்பிலும் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Heavy Rainfall, Theni

    அடுத்த செய்தி