Home /local-news /

கூடலூர் : பாஜக தனித்து போட்டி - நகர்மன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றப் போவது எந்த கட்சி? - கள நிலவரம் இதோ

கூடலூர் : பாஜக தனித்து போட்டி - நகர்மன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றப் போவது எந்த கட்சி? - கள நிலவரம் இதோ

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூடலூர் நகர மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற திமுக ,அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூடலூர் நகர மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற திமுக ,அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூடலூர் நகர மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற திமுக ,அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது

    கூடலூர் : பாஜக தனித்து போட்டி - நகர்மன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றப் போவது எந்த கட்சி? - கள நிலவரம் இதோ

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூடலூர் நகர மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற திமுக, ,அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது .


    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :-


    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் . தொடர்ந்து வேட்பு மனுக்கள் பரிசீலனை 5ம் தேதியும் , வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏழாம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு மற்றும் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2011ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதால் தமிழகம் முழுவதிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .

    அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் தேனி மாவட்டத்தை பொருத்தவரையில் மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகள் உள்ளது. இந்த ஆறு நகராட்சிகளின் நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக மற்றும் அதிமுகவின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு பிரதான கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கி தேர்தலை எதிர்நோக்கி பல்வேறு களப் பணிகளை தொடங்கினர். மாவட்டத்தில் நகராட்சி பதவிகளைக் கைப்பற்ற திமுக முயற்சி செய்தாலும் கூடலூர் நகராட்சியை கைப்பற்றுவதில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் கடும் போட்டி நிலவும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


    கூடலூர் நகர மன்ற தலைவர்
    பதவி :-


    கூடலூர் நகராட்சியை பொருத்தவரையில், கடந்த 2004ஆம் ஆண்டு பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கூடலூர் நகராட்சியின் முதல் நகர்மன்றத் தலைவரானார் தி.மு.க.,வைச் சேர்ந்த பி.வி.பாண்டியன். பிறகு 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயசுதா நகராட்சியின் முதல் பெண் தலைவராக பதவியேற்றார். ஜெயசுதா நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகளை செய்தாலும் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் ஜெயசுதாவிற்கும், சில வார்டு கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவியது. நகர் மன்ற தலைவரை எதிர்த்த கவுன்சிலர்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நகர மன்ற தலைவரின் செயல்பாட்டின் மீது ஏற்பட்ட அதிருப்தியை அவரை எதிர்ப்பதற்கான காரணமாக கூறப்பட்டது. இதனால் நகர்மன்ற கூட்டத் தொடரின்போது கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருப்பது, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வது, தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை காட்டினர் . அதுமட்டுமல்லாமல் சில கவுன்சிலர்கள் கூடலூர் நகர்மன்ற தலைவர் மீது அப்போதைய மதுரை நகராட்சியின் மண்டல இயக்குனர் அசோகனிடமும் புகார் அளித்தனர். இந்த சம்பவம் ஜெயசுதாவுக்கு கூடலூர் நகர்மன்றத் தலைவருக்கான செல்வாக்கை குறைத்தது . பின்பு 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருக்கும் போது அருண்குமார் நகர்மன்ற தலைவர் ஆனார் . அதன் பின்பு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்பதால், அருண்குமார் கூடலூர் நகர மன்ற தலைவராக பதவியேற்ற ஒரு சில ஆண்டுகள் சிறப்பாக பணி செய்தாலும் , பின்னாளில் அவர் மீதும் அவரது செயல்பாடுகள் குறித்தான விமர்சனங்கள் எழ தொடங்கின.

    தற்போது, தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலம் என்பதால் கூடலூர் நகராட்சியில் பதவியைப் பிடிக்க திமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், அதிமுகவிலிருந்து சிலர் அமமுகவிற்கு இடம் பெயர்வதால் அதிமுக வாக்கு பிரிவதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது .

    தற்போது திமுகவின் ஆட்சி காலமாக இருந்தாலும் கூடலூர் நகர்மன்றத் தலைவரின் பதவியை அவ்வளவு எளிதாக பிடித்துவிட முடியாது என்பதை திமுகவைச் சேர்ந்த சிலரும் கூறி வருகின்றனர். கூடலூர் நகரில் அதிமுகவினர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெரும் முயற்சியில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தின் நேரடி தலையீடு, அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே திமுகவினரும் கூடலூர் நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். குறிப்பாக திமுகவினர் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் செய்யவேண்டிய பல்வேறு நலத்திட்டங்களை ஐந்தே மாதங்களில் செயல்படுத்தி தருவதாக கூறியும், தங்களது சாதனைகளை எடுத்துக் கூறியும் தேர்தலில் பெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல தேர்தல் யுத்தியையும் கையாண்டும், செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை களம் இறக்கும் வேலைகளையும் செய்து வருகின்றனர் .

    பாஜக தனித்து போட்டி :-


    இந்த நிலையில், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக தற்போது தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது .

    கூடலூர் நகராட்சியை பொறுத்தவரையில், அதிமுக - பாஜகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடுவதால், கூடலூர் பகுதியில் பாஜகவிற்கு செல்வாக்கு மிகுந்த 7 இடங்களில் தனித்து போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

    கூடலூர் நகர்மன்ற தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதில் பா ஜ கவின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் , மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிட்டாலும் , நகர் மன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் திமுக - அதிமுக - பாஜகவிற்கு இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் மாற்றமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: ADMK, BJP, DMK, Theni

    அடுத்த செய்தி