Home /local-news /

கூடலூர் : களைகட்டிய இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - பார்வையாளர்கள் ஆரவாரம் 

கூடலூர் : களைகட்டிய இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - பார்வையாளர்கள் ஆரவாரம் 

Race

Race

ஜான் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூர் பகுதியில் ஐந்து மாவட்ட விவசாயம் சங்கம் சார்பாக இரட்டை மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.

    ஜான் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூர் பகுதியில் ஐந்து மாவட்ட விவசாயம் சங்கம் சார்பாக இரட்டை மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.

    இரட்டை மாட்டு வண்டி பந்தயம் :-

    தேனி மாவட்டம் கூடலூரில் கர்னல் ஜான் பென்னிகுவிகின் 181 வது பிறந்த நாளை முன்னிட்டு வார இறுதி நாளில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    ஜான் பெண்ணிகுவிக் பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி இரட்டை மாட்டு வண்டி போட்டி 5 மாவட்ட விவசாய சங்கம் சார்பாக நடத்தப்பட இருந்தது. அப்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெறுவதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை.

    இந்த நிலையில்,  தற்போது தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து,  மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டது.
    இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வகையான மாடுகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டது.  கூடலூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில்  தொடங்கிய இந்த மாட்டு வண்டி பந்தயமானது, நாட்டு மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு,புள்ளி மான், பெரிய மாடு, நடு மாடு, தட்டான் சிட்டு உள்ளிட்ட 7 வகையான மாடு வகைகளை கொண்டு, 7 பிரிவாக தனித்தனியாக நடைபெற்றது.

    இதில் பெரிய மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 30,000 வரை ரூபாய் வழங்கப்பட்டது.
    வெற்றி பெறும் நபர்களுக்கு மாடு பங்கேற்ற பிரிவின் அடிப்படையில் பரிசு தொகை மாற்றம் பெறும்

    அந்த வகையில், பெரிய மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 30, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 20,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 15,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது .

    நடு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 20, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 15,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது

    பூஞ்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 9,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 5000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

    கரிச்சான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 8,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 6,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

    தேன்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 8000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 6000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 5000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

    அதே போல் புள்ளி மான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 4000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

    மேலும் இந்த 7 வகையான மாட்டுப் பந்தயம் போட்டிகளிலும் கலந்து கொண்டு நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை பெறும் நபர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட உள்ளது.

    இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாட்டு வண்டி பந்தயமானது பொது மக்களின் ஆரவாரத்துடனும் போலீசாரின் பாதுகாப்புடனும் நடைபெற்றது


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி