Home /local-news /

கூடலூர் : உடல் முழுவதும் அழுகிய நிலையில் ஆற்றில் மிதந்த ஆண் சடலம்  

கூடலூர் : உடல் முழுவதும் அழுகிய நிலையில் ஆற்றில் மிதந்த ஆண் சடலம்  

theni

theni

Theni | தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பெரியார் மின்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது 

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பெரியார் மின்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

    ஆண் சடலம் : -

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    மின் உற்பத்தி செய்யப்படும் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் அந்த பகுதிக்கு செல்வதற்குதடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை பெரியார் மின் நிலையத்தின் நீர்தேக்க பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக மின்வாரிய அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர் . இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் தீயணைப்பு துறையினர் ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை மீட்டனர் .

    Periyar power station


    சுமார் பல நாட்களாக இறந்த நபரின் உடல் நீரிலேயே கிடந்து உள்ளதால், முழுவதும் அழுகி( decomposed ) அடையாளம் தெரியாத நிலையில் உடல் காணப்பட்டது. இதனையடுத்து கூடலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள், அடையாளம் தெரியாத நபரின் உடலை. பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இறந்த நபரின் கையில் எம்ஜிஆர், இரட்டை இலைச் சின்னம் பச்சை குத்தப்பட்டு உள்ளது. இறந்த நபரின் வயது சுமார் 50 முதல் 60 வயது வரை இருக்கும் என காவல்துறை சார்பில் கணிக்கப்பட்டுள்ளது . இறந்துபோன நபரின் தகவல் தெரிந்தால் கூடலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி