Home /local-news /

கூடலூர் : மாணவர்களுக்கான உள்ளூர் கபடி போட்டி - ஆரவாரத்துடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

கூடலூர் : மாணவர்களுக்கான உள்ளூர் கபடி போட்டி - ஆரவாரத்துடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

Kabadi

Kabadi

தேனி மாவட்டம், கருணாக்கமுத்தன் பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் சார்பாக கபடி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 9 அணிகள் பங்கேற்று பரிசுகளை பெற்று சென்றனர்.

    தேனி மாவட்டம், கருணாக்கமுத்தன் பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் சார்பாக கபடி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 9 அணிகள் பங்கேற்று பரிசுகளை பெற்று சென்றனர்.

    கபடி போட்டி :-

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருணாக்கமுத்தன் பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் கபடி போட்டி நடைபெற்றது

    இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கபடி போட்டிகள் நடத்தப்பட்டன.

    கூடலூர் மற்றும் கருணாகரன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று பிரிவின் அடிப்படையில் 9 அணிகள் கபடி போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மெடல்கள் வழங்கப்பட்டன. மூன்று பிரிவிலும் வெற்றி பெற்று முதல் 2  இடங்களை கைப்பற்றும் அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.  பரிசுகளும் கோப்பைகளும் கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் வழங்கினார்.

    அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில்  நடைபெற்ற அந்த கபடி போட்டியை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்-தேனி
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி