Home /local-news /

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி வலுக்கும் போராட்டம்!

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி வலுக்கும் போராட்டம்!

Protest

Protest

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தினை தடை விதிக்க கோரி நாள்தோறும் தொடர் போராட்டங்கள் நடந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

    கூடலூர் : மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி வலுக்கும் போராட்டம் - தடுப்பணை கட்டுவதற்கு சலவைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் அமையவிருக்கும் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தின் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சலவை தொழிலாளர்களும், விவசாய சங்கத்தினரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    உண்ணாவிரத போராட்டம் :-

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் 1296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாநகருக்கு தண்ணீர் கொண்டு செல்ல கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை பொதுப் பணித்துறையினர் கடந்த சில தினங்களாக கூடலூர் குருவனூத்து பகுதியில் உள்ள சலவைத் தொழிலாளர் கூடம் அருகே திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திட்டப்பணியை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சலவை தொழிலாளர்கள், விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை செய்தனர்.

    இதனை தொடர்ந்து தொடர் போராட்டமாக இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருக்கும் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள்.

    இந்த போராட்டத்தில் சலவைத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    மேலும் தொடர்ந்து இத்திட்டத்தை அரசு கைவிட தவறினால், எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கடை போன்றவற்றை அரசிடமே ஒப்படைத்து நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறுவதாக கூறி உள்ளனர்.

    இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கூறுகையில், " கூடலூர் வண்ணான் துறை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சலவைத்தொழில் செய்து வருகிறோம். திடீரென கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக இந்த பகுதியில் தடுப்பு அணை கட்டப்பட்டால் வாழ்வாதாரம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

    இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் நாங்கள் எங்கள் ஆதார் கார்டு மற்றும் ரேசன் கார்டுகளை திருப்பி கொடுத்துவிட உள்ளோம். இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்றது அடையாள உண்ணாவிரதம். அரசு செவி சாய்க்கவில்லை என்றால் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

    மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தினை தடை விதிக்க கோரி நாள்தோறும் தொடர் போராட்டங்கள் நடந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி