Home /local-news /

தேனி : விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு - நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

தேனி : விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு - நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கூடலூர்

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது.

    நெல் விவசாயம் :-

    தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்று தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் சுற்று வட்டாரத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கரில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    கூடலூர் தாமரைக்குளம், வெட்டுக் காடு, பார வந்தான், பி.டி.ஆ.வட்டம், ஒழுகுவழி, மரப்பாலம், ஒட்டான்குளம் பகுதியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் நடக்கிறது.

    முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தண்ணீர்
    திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடவு செய்யப்பட்ட முதல் போக நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு
    வருகிறது.

    இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்தனர்.

    இதற்கிடையே, உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல் கொள்முதல் நிலையம் திறப்பில் காலதாமதம் ஆனது. இதனால் விவசாயிகளும் நெல் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    கொள்முதல் நிலையம் :-

    நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் முரளிதரன், தேனி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    இந்நிலையில், கூடலூர் 1வது வார்டு அரசமரம் அருகே சமுதாய களத்தில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
    திறக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் பகுதிகளிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, விவசாயிகளின் வங்கி கணக்கில்
    24 மணி நேரத்தில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி