கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மொச்சை விளைச்சல் அமோகமாகவும் கிலோ 40 ரூபாய்க்கு விற்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
மொச்சை விளைச்சல் :-
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்து அவரை, தட்டைப்பயிர், மொச்சை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மொச்சைக்காய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்று, கூடலூர் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மொச்சைப் பயிரை அதிக அளவில் பயிரிட்டனர்.
கூடலூர் பகுதியில், மானாவாரி பயிரான மொச்சை பயிர் சாகுபடியில் ஆண்டுதோறும் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் மொச்சை மகசூல் அதிகரித்துள்ளது.
தற்போது மொச்சை பயிர் வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கிலோ 40 ரூபாய் முதல் விற்பனை ஆவதாக கூறுகின்றனர். சில இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் மொச்சை பயரில் கருப்பு விழுந்ததாக விவசாயிகள் கூறினர்.
ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை எனவும் குறிப்பாக கேரள மாநிலத்தில் அதிகளவில் வியாபாரிகள் நேரடியாக மொச்சை பயரை வாங்கி செல்வதாகவும், கூறுகின்றனர் .
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.