Home /local-news /

கூடலூர் :  11 வாக்குகள் மட்டுமே பெற்ற  அதிமுக வேட்பாளர்

கூடலூர் :  11 வாக்குகள் மட்டுமே பெற்ற  அதிமுக வேட்பாளர்

Candidate 

Candidate 

 கூடலூர் நகராட்சி 5 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 11 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர் நகராட்சி 5 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 11 வாக்குகளை மட்டுமே பெற்றதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தேர்தல் முடிவுகள் :-

    நடந்து முடிந்த  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டதில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும்  32 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் வெளியாகி வருகிறது.

    கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் 8-வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    முதல் சுற்று முடிவில், 3 மற்றும் 5 வது வார்டின் முடிவுகள் வெளியிடப்பட்டது.  அதன்படி, 3-வது வார்டில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட செல்வம் 275 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் மலைச்சாமி 29 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் சரஸ்வதி 15 வாக்குகளையும், திமுக வேட்பாளர் கணேசன் 506 வாக்குகளையும் பெற்றனர்.

    இதில், திமுக வேட்பாளர் கணேசன் 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கான  சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்

    இதேபோல, கூடலூரில் 5-வது வார்டில் தேமுதிக சார்பாக போட்டியிட்ட சித்ராதேவி 149 வாக்குகளையும், எஸ்டிபிஐ சார்பாக போட்டியிட்ட ரம்ஜான் 113 வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர் நசீமா இரண்டு வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் சுபிதா 11 வாக்குகளும், திமுக வேட்பாளர் பல்கீஸ் 508 வாக்குகளும் பெற்றுள்ளனர் .

    இதில். திமுக வேட்பாளர் பல்கீஸ்  359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 5 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா 11 வாக்குகள் மட்டுமே பெற்றது அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி