ஹோம் /Local News /

கூடலூர் : அதிமுக வேட்பாளர் வேட்புமனு வாபஸ்; திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

கூடலூர் : அதிமுக வேட்பாளர் வேட்புமனு வாபஸ்; திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

Theni News | கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 6 ஆவது வார்டில் திமுக சார்பில் லோ.பத்மாவதி, அதிமுக சார்பில் தேவி, பாஜக சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கூடலூரில் 6-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  திமுக வேட்பாளர் தேர்வு :-

  தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு வேட்பாளர்களை திமுக , அதிமுக மற்றும் பிரதான கட்சியை சேர்ந்தவர்கள் அறிவித்து தேர்தல் களப் பணியில் ஈடுபட தொடங்கினர்.

  இதில், கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 6 ஆவது வார்டில் திமுக சார்பில் லோ.பத்மாவதி, அதிமுக சார்பில் தேவி, பாஜக சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிட்டனர். பா.ஜ.க.வேட்பாளர் வேட்புமனுவில் பிழை இருந்தால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 6வது வார்டில் திமுக, அதிமுக வேட்பாளர்களிடையே நேரடி போட்டி நிலவியது.

  தற்போது அதிமுக வேட்பாளர் தேவி வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கூறி, திடீரென வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இதன் காரணமாக, கூடலூர் நகர சபை உறுப்பினர் பதவிக்கு 6-வது வார்டில் போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர் பத்மாவதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பத்மாவதியின் கணவர் சி.லோகன்துரை 1-வது வார்டில் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார், இவர் தற்போது திமுக நகர செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

  செய்தியாளர்: சுதர்ஸன்

  Published by:Vijay R
  First published:

  Tags: DMK, Gudalur, Local Body Election 2022, Theni