Home /local-news /

கூடலூர் : ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்

கூடலூர் : ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்

ADMK candidate 

ADMK candidate 

கடலூர் நகராட்சியில் 12 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 484 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

    கூடலூர் நகராட்சியின் 12 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 484 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அதிமுக வேட்பாளர் வெற்றி :-

    தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 21 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் இதர சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவுக்கு முன்பே ஆறாவது வார்டு பகுதியில் எதிர் வேட்பாளர்கள் இல்லாததால் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் கூடலூர் பகுதியில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சம அளவில் இருப்பதாக கணிக்கப்பட்டு அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கூடலூரில் உள்ள பூங்கா பள்ளியில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

    முதல் சுற்றில் முதல் எட்டு வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 6 இடங்களில் திமுக மற்றும் இரண்டு இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது சுற்றில் 15 வார்டுகளுக்கான முடிவு வெளியிடப்பட்டது. அப்போது திமுக 8 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்ததால் இறுதி முடிவுகள் வெளியாவதில் கடும் எதிர்பார்ப்பு நிலவியது.

    வாக்குப் பதிவின் இறுதியில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் 12 வது வார்டில் திமுக வேட்பாளர் கோமதியம்மாள் 483 வாக்குகளும் அதிமுகவை சேர்ந்த வேட்பாளரான சாந்தி 484 வாக்குகளையும் பெற்றனர்.  ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தட்டிச் சென்றார் அதிமுக வேட்பாளர்.

    திமுக வேட்பாளர் கோமதியம்மாள் 10 தபால் ஓட்டுகள் பெற்றிருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் சாந்தி ஒரு தபால் ஓட்டினைப் பெற்று, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கூடலூர் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி