Home /local-news /

தேனி : தீவிரமாக நடைபெறுகிறது சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி  

தேனி : தீவிரமாக நடைபெறுகிறது சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி  

ஒளிரும் ஸ்டிக்கர்

ஒளிரும் ஸ்டிக்கர்

Theni : தேனி மாவட்டம் முழுவதும் பைபாஸ் சாலை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஒளிரும் பட்டைகள் ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தேனி மாவட்டம் முழுவதும் பைபாஸ் சாலை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சென்டர் மீடியன் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வாகன ஓட்டிகள் எளிதில் அடையாளம் காணும் விதமாக ஒளிரும் பட்டைகள் ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பைபாஸ் பணி :-

    திண்டுக்கல் முதல் குமுளி வரையிலான சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முழுவதும் முடிவுறும் நிலையில் உள்ளது. தேனி மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த குறுகிய தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த, திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

    திண்டுக்கல் முதல் குமுளி வரை உள்ள சாலையை அகலப்படுத்தி இருவழி அகல பாதையாக மாற்றும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது வரை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் முதல் குமளி வரை நெடுந்தூரம் பயணிக்கும் வாகனங்கள் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம்,தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் என நகர்ப்புற பகுதிக்குள் செல்லாமல் நேரடியாக பைபாஸ் வழியாகவே செல்லும் நோக்கில் இந்த இருவழி பைபாஸ் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன

    இந்த சாலை பணிகள் தற்போது திண்டுக்கல், தேனி மாவட்டம் உட்பட அனைத்து பகுதிகளிலும் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பைபாஸ் சாலையில் எஞ்சிய பணிகளான வெள்ளைக் கோடு இடுதல், அறிவிப்பு பலகை வைத்தல், மற்றும் எச்சரிக்கை பலகை வைப்பது, சென்டர் மீடியன் வைப்பது போன்ற எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி :-

    இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பைபாஸ் சாலைகளில் விபத்துகளை தடுக்கும் விதமாக முதற் கட்ட நடவடிக்கையை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி பைபாஸ் சாலை மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் போலீசார் சோதனை சாவடி, பேரிக்காட் மற்றும் சென்டர் மீடியன் போன்றவைகள் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரத்திலும் தெளிவாக தெரிய வேண்டும் என்ற காரணத்தினால் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தேனி மாவட்டத்தில் போக்குவரத்து காவல் அதிகாரிகளால் ஒட்டப்பட்டு வருகிறது.

    தேனி நகரில் கம்பம் ரோடு, மதுரை ரோடு, பெரியகுளம் ரோடுகளில் மைய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவில் வரும் வாகனங்கள் அடிக்கடி தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க, தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பெரியகுளம், கம்பம், மதுரை ரோடுகளில் முக்கிய இடங்களில் விபத்துகளை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்ட கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரண்மனைப்புதுார் விலக்கு சந்திப்பில், அதிகளவு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் கம்பம் கூடலூர் புதுப்பட்டி அனுமந்தன்பட்டி ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பேரிகாட் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பேரிகாட் முழுவதும் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் உள்ள நகர் பகுதி முழுவதும் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் இரவு நேர விபத்துக்கள் குறையும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Road Safety, Theni

    அடுத்த செய்தி