கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தடை உத்தரவு :-
ஒமைக்ரான் மற்றும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான
மேகமலைக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதைடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சின்னமனூர் அருகே உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோடை வாசஸ்தலமாக விளங்கும் மேகமலை, ஹைவேவிஸ் தேயிலை தோட்டபகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல ஓராண்டிற்கு பின் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .
சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டுமெனவும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .
மீண்டும் மேகமலை திறக்கப்பட்ட தகவல் தெரிந்து கணிசமான சுற்றுலாப்பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.