தேனி : பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மாவட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அரசு வழங்கும் ஏதேனும் தலைப்புகளில் செயல்படுத்தும் நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கிப் பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது
பசுமை சாம்பியன் விருது :-
தமிழக அரசின் சார்பில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ஒரு லட்சம் வீதம் பணமுடிப்பும் வழங்க உள்ளது
அரசால் வழங்கப்பட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் ஆகியவைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்
தலைப்புகள் :-
1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி,
2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு,
3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு,
4. பசுமை தயாரிப்புகள்
5. பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்
6. நிலைத்தகு வளர்ச்சி
7. திடக்கழிவு மேலாண்மை
8. நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு
9. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை
10.காற்று மாசு குறைதல்
11. பிளாஸ்டிக் பைகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு
12. சூழியியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை
13. கடற்கரை சார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை
கால அவகாசம் நீட்டிப்பு :-
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்த தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, தலைப்புக்கு ஏற்றவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு, தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்து விருதுகளை வழங்குவர்.
இதனை விண்ணப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (www.tnpcb.gov in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2022 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தனிநபர், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து தரமான முன்மொழிவுகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவம், மற்றும் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து, விண்ணப்பித்து பயனடையலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.