கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அலுவலகம் முன்பு திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை முயற்சி :-
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகம் முன்பு தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் பணம் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு பதவி வழங்கி விட்டதாக குற்றம் சாட்டி தனக்கு எந்த பதவியும் வழங்கவில்லை எனக் கூறி கம்பம்மெட்டு ரோடு காலணி ஒன்பதாவது வார்ட்டை சேர்ந்த முன்னாள் திமுக வார்டு செயலாளரான ஷாஜகான் கடந்த சனிக்கிழமையன்று (மே 7) தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அங்கு இருந்த போலீசார் சுதாகரித்துக் கொண்டு மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி போலீசார் உடனடியாக இழுத்துச் சென்று தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர்.
திமுக முன்னாள் வார்டு செயலாளர் தீக்குளிக்க வந்த சம்பவம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர் ஷாஜகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.