தை அமாவாசை - சுருளி அருவியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர் .
சுருளி அருவி :-
சுருளி அருவியில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் கூட்டம் கூடுவதை பார்க்க முடியும்.
குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை நாட்களில் அதிகமான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதால் அதிகமான பக்தர்கள் கூடுகின்றனர்.
அந்த வகையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் குவிய தொடங்கினர்.
தர்ப்பணம் செய்ய வருபவர்கள் சுருளி அருவியில் நீராடிய பின்னரே திதி கொடுக்க செல்வர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சுருளி அருவியில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஆற்றுப்பகுதியில் நீராடி தர்ப்பணம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு, சுருளி அருவிக்கு கம்பம் நகரில் இருந்து கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.