ஹோம் /Local News /

கம்பம் நகரில் சரக்கு வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 

கம்பம் நகரில் சரக்கு வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 

X
சரக்கு

சரக்கு வாகனங்கள்

Theni District: தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து டிரைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து டிரைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

வேலை நிறுத்த போராட்டம் :-

தேனி மாவட்டம் கம்பம் நகரின் அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருள்கள் பிக்அப், 404 போன்ற சரக்கு வாகனத்தில் தினசரி அனுப்பப்பட்டு வருகிறது. கம்பம் பகுதியில் விளையும் காய்கறிகள் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. தோட்டங்களில் விளையும் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கம்பம் நகரில் உள்ள சரக்கு வாகனங்கள் பயன்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாமல் வாகனங்களின் உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பம் நகர் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கம்பம் நகரில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்கள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சார்பாக, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் உயர்ந்து வரும் உதிரிபாகங்கள் விலையை கண்டித்தும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கம்பத்தில் சரக்கு வாகனங்கள் முழுவதும் இயங்கவில்லை. கம்பம் தனியார் பள்ளி அருகே உள்ள பைபாஸில் சுமார் 150க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் , " எரிபொருள் விலை உயர்வு எங்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. பொதுமக்களிடம் அதிக வாடகை பெறமுடியவில்லை. நிதி நிறுவனங்களுக்கு தவணை செலுத்த முடியவில்லை. எனவே எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதாலும், வாகனங்களின் உறுதி பாகங்களில் விலை ஏற்றம் கண்டுள்ளதாலும் தற்போது வசூலிக்கப்படும் வாடகை தொகையிலிருந்து ஆயிரம் ரூபாய் உயர்த்த உள்ளோம்" என்றனர்

செய்தியாளர்: சுதர்ஸன்

First published:

Tags: Cumbum