கம்பம் : தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்று வருகிறது.
பயிற்சி வகுப்புகள் :-
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்டத்திலுள்ள கம்பம், கூடலூர், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி,பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட 9 இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டு, தலைமை தேர்தல் அலுவலர்கள் தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகளையும் வழங்கினார் .
தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 513 வார்டுகளில் 742 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
இந்த 742 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள சுமார் 3,500-க்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.