Home /local-news /

கம்பம் : சத்துணவு கூடம் அருகே புதிய டாஸ்மாக் கடை... பொதுமக்கள் எதிர்ப்பு

கம்பம் : சத்துணவு கூடம் அருகே புதிய டாஸ்மாக் கடை... பொதுமக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக்

டாஸ்மாக்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்த ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில், புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

    தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து ஆங்கூர் பாளையம் செல்லும் சாலையில் சத்துணவு கூடம் மற்றும் பள்ளி அருகே புதிதாக திறக்க உள்ள மதுபான கடையை இடம் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுபான கடை :-

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்த ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில், புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் மக்கள் அதிகம் வசிப்பதாலும், குழந்தைகள் அதிகம் பயிலும் சத்துணவு கூடம், ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கும் முத்தையா பிள்ளை நினைவு பள்ளியும் உள்ளது. இப்பகுதியில் மதுபானக்கடை திறந்தால் , குழந்தைகள் மற்றும் பெண்கள் பள்ளி, வீடு பகுதிக்கு செல்வது சிரமம் ஏற்படும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் கம்பம் - ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் திறக்க ஏற்பாடு செய்து வரும் மதுபான கடையை வேறு இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். மேலும், பள்ளியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் அந்தப் பகுதியில் மதுபானக்கடை திறந்தால் குற்ற செயல்களும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படும் என்ற காரணத்தினால், மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் அஞ்சல் அட்டையில் புகார் எழுதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி