Home /local-news /

கம்பம் : பிங்க் அக்டோபர் - சித்த வைத்தியத்தில் மார்பகப் புற்று நோயினை எதிர்கொள்ள முடியுமா?

கம்பம் : பிங்க் அக்டோபர் - சித்த வைத்தியத்தில் மார்பகப் புற்று நோயினை எதிர்கொள்ள முடியுமா?

தேனி மாவட்டம் கம்பத்தில் சித்த வைத்தியத்தில் மார்பகப் புற்றுநோயில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் சித்த வைத்தியத்தில் மார்பகப் புற்றுநோயில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் சித்த வைத்தியத்தில் மார்பகப் புற்றுநோயில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    <b>கம்பம் : பிங்க் அக்டோபர் - சித்த வைத்தியத்தில் மார்பகப் புற்று நோயினை எதிர்கொள்ள முடியுமா?
    </b>

    உலகம் முழுவதும் அக்டோபர் மாதம், பிங்க் அக்டோபர் மாதம் அனுசரிக்கப்பட்டு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் சித்த வைத்தியத்தில் மார்பகப் புற்றுநோயில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    <b>
    பிங்க் அக்டோபர் :-</b>

    உலக சுகாதார நிறுவனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதற்காக பிங்க் அக்டோபர் மாதம் என்ற பெயரில், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதை காணமுடிகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டத்திலும் சமீபகாலமாக அரசு மருத்துவர்களும், பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    <b>தேனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி :-
    </b>
    தேனி மாவட்டம், கம்பம் நகர் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிங்க் அக்டோபர் மாதமாக அனுசரிக்கப்படும் நிலையில், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், சித்த மருத்துவர் சிராஜூதீன், மருத்துவர் சுதா, மருத்துவர் அர்ச்சனா, மருத்துவ செவிலியர்கள் மருந்தாளுநர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்தும், மார்பக புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது என்றும், மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்றும் , மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    <b>சுயபரிசோதனை பற்றி
    விழிப்புணர்வு :-

    </b>
    மேலும், இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டதுடன், பெண்கள் வீட்டிலேயே அவர்களாகவே மார்பக சுய பரிசோதனை செய்வது பற்றியும்,
    அரசு ஆரம்ப சுகாதார நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவது பற்றியும்
    விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

    <b>
    சித்த வைத்தியம் :-</b>

    பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து ஆங்கில வழி மருத்துவ முறை மட்டுமல்லாமல், சித்த மருத்துவர் சிராஜ்தீன், சித்த வைத்தியம் மூலமும் எவ்வாறு மார்பகப் புற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது, மார்பக புற்றுநோய் வராமல் இருக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்வது, சித்த மருத்துவ முறையின் மூலம் மார்பகப் புற்று நோயை எவ்வாறு வெல்வது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

    <b>செய்தியாளர்: சுதர்ஸன்</b>
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி