Home /local-news /

கம்பம் : கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு அபராதம் 

கம்பம் : கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு அபராதம் 

தமிழக

தமிழக அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது.

    கம்பம் பகுதியில் தாசில்தார் தலைமையில், முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    கட்டுப்பாடு நடவடிக்கைகள் :-

    கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்களிடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக அரசு இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தமிழக அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் தலைமையில், போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து சாலையில் முக கவசம் அணியாமல் செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதித்து அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர் .

    மேலும் தனியார் பேருந்துகளில் முக கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளுக்கும் நடத்துனர்க்கும் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது .

    செய்தியாளர்: சுதர்ஸன்

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Lockdown, Theni

    அடுத்த செய்தி