இரண்டு மாதத்திற்கும் மேலாக கம்பம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலியாக பிரசவ வார்டு பகுதி நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரசவ வார்டு :-
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதிக்கு பிரத்யேகமாக உள்ள நுழைவாயில் அடைக்கப்பட்டு இருந்ததால், பிரசவத்திற்கு செல்லும் பெண்களும் அவர்களது உறவினர்களும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்த செய்தி தொகுப்பு நியூஸ்18 உள்ளூர் தளத்தில் மார்ச் 2 அன்று வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக பிரசவ வார்டு பகுதிக்கான நுழைவாயிலை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இன்று முதல் நுழைவாயில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது .
Also read: கம்பம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பாதை மூடல் - பெண்கள் சுவர் ஏறி குதிக்கும் அவலம்
பிரசவ வார்டு பகுதி :-
தேனி மாவட்டத்தில், தேனி அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அடுத்தபடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் தான் அதிகளவிலான பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரள மக்கள் உட்பட கம்பம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களும் கம்பம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதி உள்ளதால் பெரும்பாலானோர் கம்பம் அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக பயன்படுத்துகின்றனர்.
இந்த மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதி மருத்துவமனையின் பின்புறத்தில் அமைந்துள்ளது. மருத்துவமனையின் பின்புறத்தில் பிரசவ வார்டு பகுதிக்கு தனியாக உள்ள நுழைவாயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்த போதிலும் , மருத்துவமனை நிர்வாகம் பின்புறத்தில் உள்ள பிரசவ வார்டு பகுதிக்கு என தனியாக உள்ள நுழைவாயிலை திறக்காமல் இருந்ததால், பிரசவத்திற்கு வரும் பெண்கள் மருத்துவமனையின் முன்பக்க நுழைவு வாயில் வழியாக பிரசவ பகுதிக்கு 400 மீட்டர் சுற்றி வந்தனர். பிரசவத்துக்கு வரும் பாதையில் பிணவறை உள்ளதால் அந்த பகுதியை கடந்து வர பெண்கள் மிகவும் அச்சப்பட்டனர்.
செய்தி எதிரொலி :-
மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு தேவைப்படும் அவசர தேவைக்கான பொருட்களை வாங்க சிகிச்சை பெறுவோரின் உறவினர்கள் விரைவாக வெளியே சென்று பொருட்களை வாங்க முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்த செய்தித் தொகுப்பு நியூஸ் 18 உள்ளூர் தளத்தில் வெளியானதன் எதிரொலியாக மருத்துவமனை நிர்வாகம் பின்புற நுழைவாயிலை திறந்துள்ளதால் பிரசவ வார்டில் உள்ள பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் நியூஸ்18 உள்ளூர் தளத்திற்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.