Home /local-news /

கம்பம்: விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்  

கம்பம்: விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்  

கம்பம்

கம்பம் நகரில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், பிரதான கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்

கம்பம் நகரில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், பிரதான கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்

  • Last Updated :
    கம்பம்: விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்



    கம்பம் நகரில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், பிரதான கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.


    வேட்புமனு தாக்கல் :-


    தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக, திமுக, அமமுக மற்றும் சுயேட்சையினர் ஆர்வமாக உள்ளனர்.



    கம்பம் நகராட்சியில் , கம்பம் வடக்கு நகர திமுகவினர் போட்டியிட 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

    அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பேரிகார்டு அமைத்து வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் இருவரை தவிர வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினரை , அலுவலக பகுதிக்குள் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

    இதனால், கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    பின்னர், போலீசார் கட்சிக்காரர்களிடம் நடத்திய சுமூக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியது .

    திமுக சார்பில் 14 வார்டுகளில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் 33 வார்டுகளிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும், பாஜக, தேமுதிக மற்றும் சுயேட்சைகள் என பலரும்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி