Home /local-news /

கம்பம் : பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றியது - பொதுமக்கள் அதிர்ச்சி

கம்பம் : பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றியது - பொதுமக்கள் அதிர்ச்சி

Fire

Fire accident 

கம்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே பழங்கள் ஏற்றி செல்லும் லாரி திடீரென தீப்பற்றியதால் லாரி முழுவதும் எரிந்து நாசமானது 

    கம்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே பழங்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பற்றியதால் லாரி முழுவதும் எரிந்து நாசமானது

    தீ விபத்து :-

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பழங்கள் ஏற்றி செல்லும் கேரளா பதிவு எண் கொண்ட லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து வந்து சொந்த ஊரான கருநாக்கமுத்தன்பட்டிக்கு சென்று விட்டு, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்லும் வேளையில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநரான செல்வம் கம்பம் பகுதியில் உள்ள மற்றொரு ஓட்டுநரை அழைப்பதற்காக கம்பம் பகுதியை நோக்கி சென்று உள்ளார் .

    கம்பம் நகர் பகுதிக்குள் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியிலிருந்து எதிர்பாராத விதமாக திடீரென தீ கசிவு ஏற்பட தொடங்கி உள்ளது. இதனை கவனித்த லாரி ஓட்டுநர் லாரியை திருப்பி நகர் பகுதியில் இருந்து வெளியே லாரியை ஓட்டி வந்துள்ளார்.

    கம்பம் தனியார் மண்டபம் அருகே லாரி வந்து கொண்டிருந்த போது தீ மளமளவென பரவியதால் லாரி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.

    துரிதமாக செயல்பட்ட லாரி ஓட்டுனர் லாரியை உடனடியாக சாலை ஓரமாக நிறுத்தி விட்டு லாரியில் இருந்து இறங்கி , தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த லாரியை தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .

    இதில் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை .

    இந்த தீ விபத்தின் போது லாரியில் சரக்கு இல்லாமல் வெறும் லாரி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Karthick S
    First published:

    Tags: Cumbum, Fire accident, Theni

    அடுத்த செய்தி