கம்பம் : இலவச எலும்பு பரிசோதனை முகாம் - ஆர்வமுடன் கலந்து கொண்ட மக்கள்
காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், DEXA SCAN மூலம் எலும்பு தேய்மானத்தை கண்டறியும் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பரிசோதணை செய்து சென்றனர்
பரிசோதனை முகாம் :-
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் BMD எனப்படும் Bone Mineral Density பரிசோதனை முகாம் என்ற எலும்பு அடர்த்தி பரிசோதனை நடைபெற்றது. இம்முகாமில் DEXA SCAN எனப்படும் Dual Energy Xray absorbent என்ற கருவியின் மூலமாக எலும்புகளின் அடர்த்தியை பரிசோதித்து எலும்புகளின் நிலைகுறித்து கூறப்பட்டது.
இம்முகாமில் 40 வயதை கடந்த பெண்கள் மற்றும் முதியவர்களும் கலந்து கொண்டனர் .
இந்த பரிசோதனையை வெளி மருத்துவமனைகளில் செய்தால் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆனால் காமய கவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவில் இலவசமாக செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையின் மூலம் எலும்புகளின் வலிமை, அதன் தாங்கும் திறன், தேய்மானத்தின் அளவு, போன்றவற்றை கண்டறியலாம்.
இதனை தெரிந்து கொள்வதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சித்த மருந்துகள், உணவு முறைகள், பயிற்சி முறைகள், போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்
இந்த பரிசோதனை முக்கியமாக ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிவு நோயை கண்டறிய உதவும்.
இந்த நிலையில் இந்த பரிசோதனையை செய்து கொள்ள கம்பம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான நபர்கள் இலவச எலும்பு பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு எலும்பின் தன்மை குறித்த பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை பெற்றுச் சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.