Home /local-news /

கம்பம்: தற்கொலை செய்துகொண்ட மருத்துவருக்கு நியாயம் கேட்டு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

கம்பம்: தற்கொலை செய்துகொண்ட மருத்துவருக்கு நியாயம் கேட்டு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

Doctor protest 

Doctor protest 

மருத்துவ சிகிச்சை அளித்த அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்கை பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    கம்பம் : தற்கொலை செய்துகொண்ட மருத்துவருக்கு நியாயம் கேட்டு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரான அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டதற்கு நியாயம் கேட்டு தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

    தற்கொலை சம்பவம் :-

    ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் நல மருத்துவரான அர்ச்சனா சர்மா தனியாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரது மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா சர்மா அவருக்கு பிரசவம் பார்த்த போது பெண்மணியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இவரின் உறவினர்களின் மருத்துவரின் தவறான சிகிச்சை மூலமே கர்ப்பிணி பெண் இறந்து விட்டதாக கூறி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். அர்ச்சனா சர்மா மருத்துவர் மீது வழக்கு பதியப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அர்ச்சனா சர்மா மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அர்ச்சனா சர்மா எழுதி வைத்த கடிதத்தில் " தேவையில்லாமல் அப்பாவி மருத்துவர்களை வன்கொடுமை செய்யாதீர்கள்" என்று எழுதிவிட்டு உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மருத்துவர் அர்ச்சனா சர்மா வின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையில் பல்வேறு பகுதியிலிருந்து மருத்துவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

    மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் :-

    அந்தவகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள இந்திய மருத்துவக் கழகத்தின் முல்லைப்பெரியாறு கிளை சார்பாக கம்பம் அரசு மருத்துவமனை முன்பாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

    மருத்துவமனையில் நடைபெறும் வழக்கமான பணிகளையும், அனைத்து புற நோயாளிகளின் பிரிவு (OPD) ஆகியவைகளை காலை 8 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை புறக்கணித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    மருத்துவ சிகிச்சை அளித்த அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்கை பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடு அளிக்க வேண்டும்,

    மருத்துவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் விதமாக மத்திய அரசின் சட்டம் தேவை,

    மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தில் மாற்றம் வேண்டும்,

    நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடுகள் கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவத்துறைக்கு விளக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    தலைமை மருத்துவர் அழகர்சாமி முன்னிலையிலும், மருத்துவர் பொன்னரசன், ஓடையன், மகேஷ் பாண்டி, பாரதி மற்றும் ஏராளமான மருத்துவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Doctor, Theni

    அடுத்த செய்தி