தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 11வது வார்டு கவுன்சிலரான சாதிக், தன்னுடைய கள பணிகளால் பொதுமக்களிடையே பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறார். அவர் செய்து வரும் மக்கள் பணி குறித்து தற்போது காணலாம்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கம்பம் நகராட்சிக்கான தேர்தலில் 11-வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்டு சமூக ஆர்வலரான சாதிக் தேர்தலில் வெற்றி பெற்றார். பதினோராவது வார்டில் பதிவான 1,579 வாக்குகளில் சாதிக் 1306 வாக்குகள் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றார்.
ஏற்கனவே சமூக ஆர்வலராக இருந்த இவர் பொதுமக்களுக்கு பல்வேறு நலப்பணிகளை செய்ததால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்துள்ளது.
தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு , 11வது வார்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான , சாக்கடை வசதி, குடிநீர், தெருவிளக்கு போன்ற தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து வருகிறார் . தன்னுடைய வார்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் தினசரி வார்டு பகுதியை சுத்தப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொதுமக்கள் குப்பை கொட்டாதவாறு பச்சை தார்ப்பாய் கட்டி அங்கு செடி நட்டு அசத்தியுள்ளார். வார்டு பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனே தெரிவிக்கும் விதமாக வார்டு பகுதி முழுவதும் புகார் எண் அடங்கிய அறிவிப்பு பலகை ஓட்டியுள்ளார்.
தொடர்ந்து மக்களுக்கான பணிகளை உடனடியாக செய்து வருவதால் , பொதுமக்களிடம் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் .
இதுகுறித்து 11 வது வார்டு நகர்மன்ற உறுப்பினரான சாதிக் கூறுகையில், " தொடர்ந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதில் குறிக்கோளாக உள்ளேன். என்னுடைய வார்டை சுத்தமான சுகாதாரமான வார்டாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பொதுமக்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சிறந்த வார்டாக மாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.