Home /local-news /

கம்பம் : விறுவிறுப்பாக நடைபெறும் பயோ - கேஸ் உற்பத்தி மையத்தின் கட்டுமான பணிகள்

கம்பம் : விறுவிறுப்பாக நடைபெறும் பயோ - கேஸ் உற்பத்தி மையத்தின் கட்டுமான பணிகள்

கம்பம்

கம்பம் : விறுவிறுப்பாக நடைபெறும் பயோ - கேஸ் உற்பத்தி மையத்தின் கட்டுமான பணிகள்

கம்பம் நகரில் பயோ -கேஸ் உற்பத்தி மையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பணி

    கம்பம் நகரில் பயோ -கேஸ் உற்பத்தி மையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பணிகளை முடிக்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பயோ -கேஸ் உற்பத்தி மையம் :-

    தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கம்பம் நகராட்சி சார்பில் நிலைகளில் மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கம்பம் நகரில் உள்ள நந்த கோபாலசாமி பகுதில் செயல்பட்டு வரும் மைக்ரோ உரக்கிடங்கின் பின்புறத்தில் குப்பைகளிலிருந்து பயோகேஸ் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் தயாராகி வரும் இந்த திட்டத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

    கம்பம் நகரில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி, இறைச்சி போன்ற கழிவுகளிலிருந்தும், மற்ற இதர கழிவுகளிலிருந்தும் பயோ-கேஸ் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பயோ-கேஸிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு , நந்தகோபால சாமி நகரில் அமைய உள்ள பூங்காவிற்கு மின்சாரம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பயோ கேஸ் உற்பத்தி விரைவில் தொடங்குவதற்காக கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி