Home /local-news /

கம்பம் : தனியார் கால்நடை மருத்துவர்களை நாடும் உரிமையாளர்கள்- காரணம் என்ன ? 

கம்பம் : தனியார் கால்நடை மருத்துவர்களை நாடும் உரிமையாளர்கள்- காரணம் என்ன ? 

Cumbum

Cumbum News | கம்பம், கூடலூர், சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

Cumbum News | கம்பம், கூடலூர், சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

  • Last Updated :
    தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மாடுகளுக்கு நோய் தாக்கி வரும் நிலையில் , கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சையும், முகாம்கள் ஏதும் அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர் ஊத்துக்காடு கிராம மக்கள்.

    கால்நடை வளர்ப்பு :-

    தேனி மாவட்டத்தில் அதிக அளவிலான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் கால்நடைகளை வைத்து விவசாயமும் செய்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

    ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கோம்பை போன்ற பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கப்பட்டாலும், கம்பம், கூடலூர், சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

    குறிப்பாக, கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராம பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஊத்துக்காடு பகுதியில் வசிக்கும் மக்கள் முழுநேரமாக மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மாடு வளர்ப்பின் போது ஏற்படும் தொற்றுநோய் மற்றும் இதர நோய் தாக்குதல் ஏற்பட்டால், மாடுகளை அழைத்துக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் கால்நடை வளர்ப்போர்.

    மேலும், கம்பம் பகுதியில் கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை எனவும் , கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த முகாம் ஏதும் தற்சமயத்தில் கம்பம் பகுதியில் எதுவும் அமைக்கவில்லை எனுவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

    அரசு மருத்துவர்கள் மாட்டின் உரிமையாளர் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என்ற காரணத்தினால் தனியார் மருத்துவர்களை நாடி செல்வதாக கூறுகின்றனர். மேலும் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோய் தாக்கிய மாடுகளுக்கு மாட்டின் உரிமையாளர்கள், தனியார் கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் கூறுகையில்,
    \" மாட்டை வைத்து தான் எங்களின் பிழைப்பு உள்ளது. மாட்டிலிருந்து கிடைக்கும் பாலை விற்பனை செய்தும், சாணத்தை இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்தும், விவசாயத்திற்கு மாடுகளை பயன்படுத்தியும் வருகிறோம். வழக்கமாக மாடுகளுக்கு அவ்வப்போது நோய் தாக்குதல் ஏற்படும். நோய் தாக்குதலில் இருந்து மாடுகளை பாதுகாக்க கால்நடை மருத்துவமனையை அணுகுகிறோம்.

    ஆனால் கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை. நோய்வாய்ப்பட்ட மாடுகளை சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் கால்நடை மருத்துவர்கள் மாடு வளர்க்கும் இடத்திற்கே வந்து சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும்.

    அரசு மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்க வருவதில்லை என்ற காரணத்தினால் தனியார் மருத்துவர்களை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவர்கள் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சையை மாடு நோய்வாய்ப்பட்ட இடத்திற்கே வந்து சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி