Home /local-news /

சொத்து வரி உயர்வு - கம்பம் நகராட்சி மன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதம்...

சொத்து வரி உயர்வு - கம்பம் நகராட்சி மன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதம்...

Cumbum

Cumbum municipality assembly 

Property Tax Hike | கம்பம் நகராட்சியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வு குறித்த நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு. இருப்பினும் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதால் சொத்து வரி உயர்வை தீர்மானம் நிறைவேற்றம் 

    கம்பம் : நகர்மன்ற கூட்டத்தில் திமுக அதிமுக இடையே வாக்குவாதம் - அதிமுகவினர் வெளிநடப்பு செய்தும் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்

    கம்பம் நகராட்சியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வு குறித்த நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு. இருப்பினும் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதால் சொத்து வரி உயர்வை தீர்மானம் நிறைவேற்றம்

    சொத்து வரி உயர்வு :-

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் வனிதாநெப்போலியன் தலைமையில் நகர்மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக மற்றும் அதிமுக வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்ற நகர்மன்ற கூட்டமானது தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கியது.

    பின்னர் கம்பம் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி குறித்த விபரங்கள் பற்றிய விவாதம் நடைபெற்றது. சொத்துவரி உயர்வான விவரங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டு இருக்கும் போது அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் சொத்துவரி உயர்விற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்தனர்.

    கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி கடன் 5 கோடியே 28 லட்சம் கடன் எப்படி ஏற்பட்டது என்பதை நகராட்சி நிர்வாகம் புள்ளி விவரத்துடன் தெரிவிக்க வேண்டும் எனவும் , அரசு மருத்துவமனையில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை வரை சாலையில் இருபுறமும் உள்ள மணலால் விபத்து ஏற்படுகின்றன அதனைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

    சொத்துவரியுடன் குப்பைவரி என வசூல் செய்யப்பட்டுகின்றது. இதில் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும்போது பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் .இதனால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் முருகன் தெரிவித்தார்.

    காரசார விவாதம் :-

    2011ம் ஆண்டுக்கு முன்பு தமிழக அரசு முழு அரசு மானியத்துடன் திட்டபணிகள் நடைபெற்றன. அதன்பிறகு 2016, 2020 உள்ளாட்சி பங்களிப்புடன் திட்டப்பணிகள் நடைபெற்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும்பாலான திட்டங்கள் பங்களிப்பு தொகை உடனே அறிவிக்கப்பட்டதால் நகராட்சி நிர்வாகம் பெரும்பாலான திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் உள்ளாட்சிகளில் கடன் சுமை அதிகரித்துள்ளது என விளக்கம் அளித்தார் நகராட்சி ஆணையர் பாலமுருகன்.

    அதனைத் தொடர்ந்து திமுக சார்பாக குரல் கொடுத்த கவுன்சிலர்கள், அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டால் தால் நகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் கடன் சுமை ஏற்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் தான் குப்பை வரி கொண்டு வரப்பட்டது.  குப்பை வரி கொண்டுவரப்பட்டபோது கூட திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை அதிமுகவினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என திமுக கவுன்சிலரான சாதிக் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தெரிவித்தனர்.

    சொத்து வரி உயர்வு குறித்த விவாதத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே பெரும் வாக்குவாதம் முற்றியது. சொத்து வரி உயர்வு குறித்து திமுகவினர் அளித்த பதில் அதிமுகவினர் ஏற்றுக்கொள்ளாததால் அதிமுகவினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    தீர்மானம் நிறைவேற்றம்:-

    பின்னர் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக சொத்து வரியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார். அதிமுகவின் 7 வார்டு கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்து நகராட்சி வளாகத்தில் கருப்பு துண்டு அணிந்து வரி உயர்வை ரத்து செய்யகோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு, சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், நகர்மன்ற துணைத் தலைவர் சுனோதாசெல்வகுமார் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி