Home /local-news /

கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பட்டமளிப்பு விழா..

கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பட்டமளிப்பு விழா..

கம்பம்

கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி

Cumbum Sri Adi Chunchanagiri Women's College | தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

    தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. கல்லூரி செயலாளர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது .

    கல்லூரி முதல்வர் ரேணுகா வரவேற்புரை ஆற்றிய பின்னர்தேனி மாவட்ட ஆட்சியரான முரளிதரன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, 2016 - 2019 ஆம் கல்வியாண்டில் படித்த 442 மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கினார்.

    படிப்பில் முன்னேறிய மாணவிகள் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் எனவும், கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை பெற்றோர் மற்றும் ஆசிரியரின் அரவணைப்பில் இருந்த மாணவிகள் தற்போது வெளி உலகத்திற்கு சென்று வெளி உலகத்தை காண உள்ளதால் தைரியத்துடன் இருக்க வேண்டும் எனவும், பட்டம் பெற்ற மாணவிகளை வாழ்த்தியும் பேசினார் மாவட்ட ஆட்சியர்

    மாணவிகள் மகிழ்ச்சி :-

    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது ஆசிரியர்களையும், சக தோழிகளையும் சந்தித்த உற்சாகத்தில் மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர். பட்டம் பெற்ற பின்பும் கூட மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே நீண்ட நேரம் நேரம் செலவழித்து, தோழிகள் மற்றும் ஆசிரியரிடம் மனம்விட்டுப் பேசிய பின்னரே கல்லூரியை விட்டு பிரிந்து சென்றனர்.

    விழாவில் இணைச்செயலர் என்.ஆர்.வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் மற்றும் கல்லூரி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பேராசிரியைகள் மாணவிகள் மாணவிகளின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி