Home /local-news /

Ration Shop | மாதாந்திர பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் குவியும் கூட்டம்

Ration Shop | மாதாந்திர பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் குவியும் கூட்டம்

Ration shop

Ration shop

Theni News | பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய காரணத்தினால் இந்த மாதம் முதல் இரு வாரங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் குறைந்த அளவிலேயே இருந்ததாக குற்றச்சாட்டு நிலவியது.

    தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை இந்த மாதம் இரண்டு வாரங்களில் வழங்கிய காரணத்தினால், தற்போது நியாயவிலைக் கடைகளில் மாதாந்திர பொருட்கள் பெற அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    மக்கள் கூட்டம் :-

    தேனி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய காரணத்தினால் மாதாந்திர பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், மாத இறுதி நாட்களில் மாதாந்திர பொருட்களை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 517 நியாய விலை கடைகள் உள்ளன. 517 நியாயவிலைக் கடைகளில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 526 ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழக அரசின் அறிவிப்பின் படி கடந்த மாதம் முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் மாதாந்திர பொருட்களை வைப்பதற்கு இடம் இல்லை என்ற காரணத்தினால் மாதாந்திர பொருட்கள் வர தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த மாதம் துவக்கம் முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது 98 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை வழங்கும் பணி துவங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய காரணத்தினால் இந்த மாதம் முதல் இரு வாரங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் குறைந்த அளவிலேயே இருந்ததாக குற்றச்சாட்டு நிலவியது. மேலும், நியாய விலை கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு, குடியரசு தின விடுமுறை போன்ற விடுமுறை நாட்களில் கடை இயங்கவில்லை என்ற கருத்தினால் பலர், இந்த மாத அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மாதாந்திர பொருட்கள் :-

    இந்த நிலையில், ஜனவரி மாத இறுதி நாட்களில் இந்த மாத அத்தியாவசியப் பொருட்களை வாங்காத அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொருட்களை வினியோகிப்பதை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர், நியாய விலை கடை ஊழியர்கள் .

    இதனால் நியாயவிலைக் கடைகளில் மாதாந்திர பொருட்களை பெறுவதற்கான பொதுமக்களின் கூட்டம் சற்று அதிகளவில் காணப்படுகிறது. மேலும், சில பகுதிகளில் பயோமெட்ரிக் முறையில் அவ்வப்போது சிக்கல் ஏற்படுவதால் விரைவாக பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Pongal, Ration Shop, Theni

    அடுத்த செய்தி